search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோரண்ட்லா பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடு.
    X
    கோரண்ட்லா பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீடு.

    ஒரே சமயத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு கிரகப்பிரவேசம்- ஆந்திர முதல்வர் தொடங்கி வைத்தார்

    ஆந்திரா மாநிலம் முழுவதும் ஒரே சமயத்தில் 3 லட்சத்து 346 வீடுகளுக்கு கிரகப்பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்.
    நகரி:

    ஆந்திராவில் என்.டி.ஆர். வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு அரசு நிதியுதவியுடன் வீடு கட்டித் தரப்படுகிறது. ஒவ்வொரு வீடும் ரூ.2½ லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது. இதற்கான தொகையை மாநில அரசும், மத்திய அரசும் வழங்குகின்றன.

    தற்போது 3 லட்சத்து 346 வீடுகள் கட்டப்பட்டு ஒரே நேரத்தில் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. இவை ஒவ்வொன்றும் 750 சதுர அடியுடன் தனி வீடுகளாக அமைந்துள்ளன.

    விஜயவாடாவில் நடந்த விழாவில் 3 லட்சத்து 346 வீடுகளுக்கான கிரகப்பிரவேச நிகழ்ச்சியை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். அந்தந்த மாவட்டங்களில் நடந்த கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிகளில் எம்.எல். ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள், கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    கிரகப்பிரவேசத்தை தொடங்கி வைத்து முதல்- மந்திரி சந்திரபாபுநாயுடு பேசியதாவது:-

    ஆந்திரா மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 3 லட்சத்து 346 வீடுகளுக்கு கிரகப்பிரவேசம் செய்துள்ளோம். இது சரித்திர புகழ் வாய்ந்த நிகழ்ச்சி ஆகும். மேலும் 5 லட்சம் பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதில் அக்டோபர் மாதம் 2-ந்தேதி 3 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுத்து கிரகப்பிரவேசம் செய்யப்படும்.

    விசாகப்பட்டினத்தில் 61 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. விஜயவாடாவில் 60 ஆயிரம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் ஏற்கனவே 5 லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.129 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஆந்திர மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி அளிப்பதில்லை. நலிந்த மக்களுக்காக 2019-ம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி செலவில் 19 லட்சம் வீடுகள் கட்டப்படும். எனவே தேர்தலின் போது என்னை மறந்து விட்டாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ChandraBabuNaidu
    Next Story
    ×