search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் - சித்தராமையா பேட்டி
    X

    கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும் - சித்தராமையா பேட்டி

    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிப்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று மவுனத்தை கலைத்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.
    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தர்மஸ்தலா உஜிரியில் உள்ள ஆயுர்வேத இயற்கை மருத்துவ மையத்தில் சேர்ந்து புத்துணர்ச்சி சிகிச்சை பெற்று வந்தார். அவர் அங்கு 12 நாட்கள் தங்கி இருந்தார். அப்போது தனது ஆதரவாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசிய வீடியோ காட்சிகள் செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய தேவை இல்லை என்றும், இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என்றும் அவர் கூறிய உரையாடல் வீடியோ வெளியானது.

    இந்த நிலையில் பெங்களூரு திரும்பிய சித்தராமையா காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு பின் மவுனத்தை கலைத்து பேசிய சித்தராமையா, கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று தெரிவித்தார்.



    இதுகுறித்து அவர் கூறுகையில், “சாதாரணமாக பேசுவதை வீடியோ எடுத்து அதை பகிரங்கமாக வெளியிடுவது நீதி நெறிமுறைகளுக்கு எதிரானது. எந்த சூழ்நிலையில் நான் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. நான் தனிப்பட்ட முறையில் ஒருவருடன் பேசுவதை வீடியோ எடுத்து வெளியிடுவது என்பது சரியானதா?. இந்த கூட்டணி ஆட்சி நிலைத்து நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார்.

    துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறுகையில், “நான் சொன்ன கருத்துக்கு நீங்கள் வேறுவிதமாக அர்த்தம் கற்பித்தீர்கள். நான் எந்த அர்த்தத்தில் கருத்து சொன்னேன் என்பது உங்களுக்கு தெரியாது. மதவாத கட்சியான பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அரசு நிலையாக நீடிக்கும். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்” என்றார். 
    Next Story
    ×