search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை
    X

    பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை

    கேரளா அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பாவமன்னிப்பு கேட்க சென்ற பெண்ணுக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KeralaPriests
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்.

    திருவல்லா பகுதியை சேர்ந்த ஒரு பெண் இந்த ஆலயத்திற்கு வந்து ஒரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு அறிக்கை செய்தார். தான் இப்போது திருமணம் செய்துகொண்டு கணவருடன் வசித்து வருவதாகவும், திருமணத்திற்கு முன்பு தனக்கு ஒரு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் கூறி அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

    இந்த பாவ அறிக்கையை ரகசியமாக வைக்க வேண்டிய அந்த பாதிரியார் அதை வைத்தே அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அவர் மேலும் 4 பாதிரியார்களிடம் கூறி உள்ளார். அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காட்சியையும் ரகசியமாக படம்பிடித்து அதையும் மற்ற பாதிரியார்களுக்கு அனுப்பினார். இதனால் அவர்களும் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    பாதிரியார்கள் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் அந்த பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தனது கணவரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த ஆலயத்திற்கு சென்று நிர்வாகத்தினரிடம் தனது மனைவிக்கு 5 பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி புகார் செய்தார்.

    மேலும் இதுபற்றிய விவரங்களை ஆடியோவாக பதிவு செய்த கணவர் அதை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டார். உருக்கமாக பேசியிருந்த அவரது ஆடியோ பலருக்கும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆலய நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து 5 பாதிரியார்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.

    அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு பாலியல் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தால் அவர்கள் மீது முறைப்படி போலீசில் புகார் செய்யப்படும் என்றும் ஆலய நிர்வாகம் அறிவித்து உள்ளது. #KeralaPriests
    Next Story
    ×