search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா குற்றச்சாட்டுகளுக்கு மெகபூபா முப்தி பதிலடி
    X

    அமித் ஷா குற்றச்சாட்டுகளுக்கு மெகபூபா முப்தி பதிலடி

    ஜம்மு காஷ்மீரில் நேற்று பேசிய அமித் ஷா முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மெகபூபா ட்விட்டரில் பதிலளித்துள்ளார். #MehboobaMufti #AmitShah
    ஸ்ரீநகர்:

    மெகபூபா முப்தி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா முதன்முறையாக நேற்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சென்று தொண்டர்களிடையே பேசினார்.

    அப்போது பேசிய அவர், லடாக் ஜம்மு இடையே எவ்வித வளர்ச்சியும் இல்லாததால் தான் நாங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள முன்னாள் முதல்மந்திரி மெகபூபா முப்தி அவர் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தலைவர் அமித் ஷா வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு ஜம்மு லடாக் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டுமே அங்கு வளர்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், அப்பகுதிகளில் எவ்வித வளர்ச்சியுமே இல்லை என கூறமுடியாது எனவும் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.



    இதையடுத்து, சர்ச்சைக்குரியா கதுவா பாலியல் வன்கொடுமை வழக்கினை சி.பி.ஐ வசம் ஒப்படைக்காமல், அதே சமயம், இரு சமூகத்தாருக்கு இடையே எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாத அளவுக்கு அந்த பிரச்சனைகளை முதல்மந்திரியாக தாம் கையாண்டதாக மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

    மேலும், பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை மிரட்டிய புகாரில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை அந்த கட்சியின் தலைமை என்ன செய்யப்போகிறது? என்றும், கடந்த 3 ஆண்டுகளாக பா.ஜ.க.வின் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார். #MehboobaMufti #AmitShah
    Next Story
    ×