search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் ஆட்சியில் இருந்த இத்தனை நாள் என்ன செய்தீர்கள்? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி
    X

    காஷ்மீரில் ஆட்சியில் இருந்த இத்தனை நாள் என்ன செய்தீர்கள்? அமித்ஷாவுக்கு காங்கிரஸ் பதிலடி

    தனது ஜம்மு பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்த அமித்ஷாவுக்கு, ஆட்சியிலிருந்த இத்தனை நாட்கள் என்ன செய்தீர்கள்? என அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது. #AmitShah #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் மாநில மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், காஷ்மீர் மக்கள் இந்தியாவிடம் இருந்து விடுதலையையே விரும்புகிறார்கள் என சமீபத்தில் பேசியிருந்தார். நேற்று, ஜம்மு சென்றிருந்த பாஜக தலைவர் அமித்ஷா, இதனை வைத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

    இதற்கு பதில் அளித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, தேசியம் குறித்தும் தேச நலன் குறித்தும் காங்கிரசுக்கு உபதேசம் செய்ய தகுதி அமித்ஷாவுக்கு இல்லை என்று கூறினார். 

    மேலும், இந்திய நாட்டுக்காக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர் தங்களது இன்னுயிரை நீத்துள்ளனர். நாட்டின் நலனுக்காக ரத்தம் சிந்தியவர்களில் பெரும்பாலானோர் காங்கிரஸார்தான். ஜம்மு - காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததில் பெரும் பங்கும் காங்கிரசுக்கே உண்டு. உண்மை நிலை இப்படியிருக்க அமித் ஷாவோ தவறான தகவல்களைத் தெரிவித்து வருகிறார். 

    அந்த மாநிலத்தில் இத்தனை நாள்களாக ஆட்சி நடத்தியபோதும் மக்கள் நலனுக்காக பாஜக எதுவுமே செய்யவில்லை. ஆனால், தற்போது காஷ்மீர் நலனில் அக்கறை இருப்பது போல அமித்ஷா முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×