search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது: குமாரசாமி
    X

    கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது: குமாரசாமி

    கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாத என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். #cmkumaraswamy #cauveryissue #karnatakafarmers
    பெங்களூரு:
     
    காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. மேலும், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

    இந்த நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக  முதல் மந்திரி குமாரசாமி கூறியதாவது:- “கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது. கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

    சட்ட ரீதியாக பிரச்சினை வந்தால் அதை பார்த்துக்கொள்ள தயார். தீர்ப்பாயம் கூறிய படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்குவதை அமல்படுத்தியுள்ளோம்” 

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.  #cmkumaraswamy #cauveryissue #karnatakafarmers
    Next Story
    ×