search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தலைவர் அமித் ஷா காஷ்மீர் பயணம்
    X

    பரபரப்பான அரசியல் சூழலில் பாஜக தலைவர் அமித் ஷா காஷ்மீர் பயணம்

    காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா வரும் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்யவுள்ளார். #AmitShah
    ஸ்ரீநகர் :

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துக் கடந்த 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன. கடந்த சில மாதங்களாகக் கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பால் அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கட்சி திடீரென வாபஸ் பெற்றது.

    இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்தார். தற்போது அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலில் உள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் மாநில பாஜக தலைவர் ரவிந்திர ரெய்னா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    பாரதிய ஜனசங்க தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி நினைவு தினத்தை முன்னிட்டு பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா வரும் ஜூன் 23-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் செய்யவுள்ளார்.

    இந்த பயணத்தின் போது, அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது மற்றும் மாநிலத்தின் தற்போதைய சூழல் குறித்து மாநில தேர்தல் பணி குழு நிர்வாகிகளுடன் அவர் அலோசனை செய்ய உள்ளார்.

    அன்றைய தினம், பாரதிய ஜனசங்க தலைவர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு அவர் நினைவு அஞ்சலி செலுத்திய பிறகு பிராமின் சபா பரேட் சாலையில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #AmitShah
    Next Story
    ×