search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூபாயை எண்ணி முடித்துவிட்டீர்களா? ரிசர்வ் வங்கி கவர்னரிடம் பாராளுமன்ற நிலைக்குழு கேள்வி
    X

    ரூபாயை எண்ணி முடித்துவிட்டீர்களா? ரிசர்வ் வங்கி கவர்னரிடம் பாராளுமன்ற நிலைக்குழு கேள்வி

    ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கிக்கடன் மோசடி, கடன் கொள்கை ஆகியவை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலிடம் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. #UrjitPatel
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேல் நிதித்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் இன்று ஆஜரானார். காங்கிரஸ் எம்.பி வீரப்ப மொய்லி தலைமையிலான இந்த நிலைக்குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு கட்சி எம்.பி.க்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று வெளிநாட்டுக்கு ஓடிய தொழிலதிபர்கள் குறித்து உர்ஜித் பட்டேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், சமீபத்தில் ஏற்பட்ட ரூபாய் நோட்டு தட்டுப்பாடு, வங்கியில் கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் உள்ள கோளாறுகள், பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு வந்த ரூபாய் குறித்தும் கேள்வி எழுப்பட்டது.

    இதற்கு பதிலளித்து பேசிய உர்ஜித் பட்டேல், வங்கி அமைப்பை மேலும் வலிமையானதாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறியுள்ளார். சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி தினேஷ் திரிவேதி, “பணமதிப்பிழப்புக்கு பின்னர் வங்கிகளுக்கு திரும்பி வந்த நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி எந்த தகவல்களும் வெளியிடவில்லை. நிச்சயமாக அது நிலைக்குழுவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாளை கவர்னர் அதனை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

    நாளையும் நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் பட்டேல் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். 
    Next Story
    ×