search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் - மாயாவதி கட்சிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராகும் அகிலேஷ்
    X

    பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் - மாயாவதி கட்சிக்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராகும் அகிலேஷ்

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக மாயாவதி கட்சியுடன் கூட்டணியைத் தொடரவும், சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது. #Akhilesh #UPAlliance
    ஆக்ரா:

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

    சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Akhilesh #UPAlliance
    Next Story
    ×