search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
    X

    ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

    2002-ம் ஆண்டு ரூ.5 கோடி கேட்டு பிரபல தொழில் அதிபர் அசோக் குப்தாவை மிரட்டிய வழக்கில் அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். #AbuSalem #ExtortionCase
    புதுடெல்லி

    டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் அசோக் குப்தா. கடந்த 2002-ம் ஆண்டு, பாதுகாப்பு தருவதாக கூறி இவரை மிரட்டி ரூ.5 கோடி பணம் பறிக்க முயன்றதாக பிரபல நிழல் உலக தாதா அபு சலீம் மீது டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் அபு சலீம் குற்றவாளி என்று கடந்த மாதம் 26-ந் தேதி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. நேற்று அரசு தரப்பு மற்றும் அபு சலீம் தரப்பிலான வக்கீல்களின் விவாதத்துக்கு பிறகு, அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  #AbuSalem #ExtortionCase  #tamilnews 
    Next Story
    ×