search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் கோவிலை கட்டாமல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - உ.பி. முதல்வரிடம் சாதுக்கள் குழு முறையீடு
    X

    ராமர் கோவிலை கட்டாமல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - உ.பி. முதல்வரிடம் சாதுக்கள் குழு முறையீடு

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை தொடங்காமல் பா.ஜ.க.வினால் 2019-ல் ஆட்சிக்கு வர முடியாது என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் சாதுக்கள் குழு முறையிட்டுள்ளனர். #RamTemple #YogiAdityanath
    லக்னோ :

    உ.பி.யில் ராமர் கோவில் கட்டும் பணியில் காலம் தாழ்த்தப்பட்டு வருவது, சாதுக்கள் மற்றும் துறவிகள் மத்தியில் சீற்றத்தை அதிகரிக்க செய்து வருகிறது. இந்நிலையில், சாது திகம்பர அக்ஹர மஹந்த் சுரேஷ் தாஸ் தலைமையில் சாதுக்கள் மற்றும் துறவிகள் குழு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று சந்தித்து பேசினர். 

    முதல்வருடனான சந்திப்புக்கு முன்பாக பேசிய சாதுக்கள், அயோத்தியில் ராமர் கட்டும் பணி மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆளும் பாரதிய ஜனதா அரசு, ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்காமல் மீண்டும் 2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வர முடியாது என தெரிவித்தனர்.

    முதல்வர் யோகி மற்றும் சாதுக்கள் இடையிலான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    ‘அயோத்திக்கு வருகை தர பிரதமர் மோடிக்கு பல முறை கோரிக்கை வைத்தும், அயோத்திக்கு வராமல் தவிர்த்து வரும் மோடி விரைவில் அயோத்திக்கு வருகை தர வேண்டும். பைசாபாத் வழியாக பாயும் காக்ரா நதியின் பெயரை சரயு நதி என மாற்ற வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் முதல்வரிடம் சாதுக்கள் முன்வைத்துள்ளனர்.

    சாதுக்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், ராமர் கோவில் கட்டுமான பணியை விரைவில் தொடங்க உள்ளதாக உறுதி அளித்திருக்கிறார். #RamTemple #YogiAdityanath 
    Next Story
    ×