search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 49 ஆயிரம் ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு
    X

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க 49 ஆயிரம் ஆர்ஜித சேவை டிக்கெட் வெளியீடு

    செப்டம்பர் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தவற்காக 49,060 ஆர்ஜித சேவை டிக்கெட்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்களை தேவஸ்தான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மொத்தம் 49 ஆயிரத்து 60 டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    குலுக்கல் முறையில் 8 ஆயிரத்து 235 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. குலுக்கல் முறையில்லா ஆர்ஜித சேவை டிக்கெட்கள் 40 ஆயிரத்து 825 வெளியிடப்பட்டுள்ளன.

    குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்கள் சுப்ரபாத சேவை 6 ஆயிரத்து 805, தோமாலா சேவை 80, அர்ச்சனை சேவை 80, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை 120, நிஜபாத சேவை 1150.

    குலுக்கல் முறையிலா ஆர்ஜித சேவை டிக்கெட்கள் விசே‌ஷ பூஜை 1500, கல்யாண உற்சவம் 9 ஆயிரத்து 975, ஊஞ்சல் சேவை 3 ஆயிரத்து 150, ஆர்ஜித பிரம்மோற்சவம் 5 ஆயிரத்து 500, வசந்தோற்சவம் 9 ஆயிரத்து 900, சகஸ்ர தீபலங்கார சேவை 10 ஆயிரத்து 800 வெளியிடப்பட்டுள்ளன. பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்து, டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×