search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைய வேண்டும் - கென்னத் ஜஸ்டரிடம் குமாரசாமி கோரிக்கை
    X

    பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைய வேண்டும் - கென்னத் ஜஸ்டரிடம் குமாரசாமி கோரிக்கை

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரிடம் முதல் மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Bengaluru #USConsulate #CMKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னர் ஜஸ்டரை குமாரசாமி இன்று சந்தித்தார்.

    தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் நிச்சயம் அமைய வேண்டும் என குமாரசாமி ஜஸ்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது, கர்நாடக அரசு அமெரிக்காவுடன் நல்ல உறவை பேணி வருகிறது. தூதரகம் அமைப்பதற்கு தேவையான இடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட அனைத்து தேவைகளையும் தமது அரசு நிறைவேற்றி தரும்.

    அமெரிக்காவில் ஏராளமான எண்ணிக்கையில் கன்னடர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பதையும், கர்நாடகாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெங்களூருவில் 370க்கு மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் செயல்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

    பெங்களுருவில் அமெரிக்க தூதரகம் உள்பட அனைத்து நாட்டு தூதரகங்களும் அமைக்கப்பட வேண்டும் என குமாரசாமி தனது விருப்பத்தை தெரிவித்தார். #Bengaluru, #USConsulate, #CMKumaraswamy
    Next Story
    ×