search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா? - குமாரசாமிக்கு எடியூரப்பா கேள்வி
    X

    மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா? - குமாரசாமிக்கு எடியூரப்பா கேள்வி

    பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா? என்று குமாரசாமிக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கேள்வி எழுப்பியுள்ளார். #Kumaraswamy #Yeddyurappa
    பெங்களூரு :

    கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மடாதிபதிகளை பற்றி முதல்-மந்திரி குமாரசாமி தவறாக பேசுகிறார். முடிந்தால் அரசியலுக்கு வந்து பாருங்கள் என்று அவர்களுக்கு சவால் விடுக்கிறார். இதன் மூலம் மடாதிபதிகளையும், அவர்களை பின்பற்றும் பக்தர்களையும் குமாரசாமி புண்படுத்திவிட்டார். நான், குமாரசாமியை பார்த்து கேட்கிறேன், நீங்கள் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்?.



    உங்கள் கட்சி 149 தொகுதிகளில் டெபாசிட் இழந்துவிட்டது. இதுபற்றி உங்களுக்கு தெரியுமா?. மக்கள் உங்களை நிராகரித்துவிட்டனர். சித்தராமையா தயவால் நீங்கள் முதல்-மந்திரி ஆகி இருக்கிறீர்கள். ஆனால் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவை, நீங்கள்(குமாரசாமி) அவமானப்படுத்தி விட்டீர்கள். இது அவர் சார்ந்துள்ள குருப சமூக மக்களை அவமானப்படுத்தியது போல் ஆகும். இது உங்களுக்கு நல்லதல்ல.

    மோடியின் வெற்றியை தடுத்துவிட்டதாக, நீங்கள் சொல்கிறீர்கள். வெறும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு(குமாரசாமி), பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இருக்கிறதா?. உங்களுக்கு அதிகார திமிர். அந்த அதிகாரம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால் தான் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் பற்றி பேசுகிறீர்கள்.

    இவ்வாறு எடியூரப்பா கூறினார். #Kumaraswamy #Yeddyurappa

    Next Story
    ×