search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
    X

    கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

    கர்நாடகத்தில் முதல் மந்திரியாக பதவியேற்ற குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. #Karnataka #Kumaraswamy #Congress
    பெங்களூர்:

    சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

    இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.

    இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

    இதற்கிடையே கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தங்களது எம்.எல்.ஏ.க்களை கடந்த 16-ம் தேதி முதல் ஓட்டல்களில் தங்கவைத்து பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Karnataka #Kumaraswamy #Congress
    Next Story
    ×