search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்
    X

    பிரதமர் மோடி நாளை மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம்

    பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க நாளை மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ளார். #VisvaBharati University #NarendraModi #MamataBanarjee
    புதுடெல்லி :

    வங்காளதேசம் விடுதலை போரின் போது இந்தியா மற்றும் வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க பிர்பம் மாவட்டம் சாந்தி நிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேசம் பவன் என்ற பெயரில் புதிய ஆய்வகம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. விழாவில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, இந்திய பிரதமர் மோடி மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து, ஜார்கண்ட் மாநிலம் சிந்திரி பகுதிக்கு பயணம் செய்யும் மோடி அங்கு அங்கு சிந்திரி உரம் தொழிற்சாலை, எய்ம்ஸ் மருத்துவமனை, தியோகர் விமான நிலைய விரிவாக்க திட்டம், பட்ராடு அனல் மின் நிலையம், ராஞ்சியில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் அம்மாநில மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #VisvaBharati University  #Shiekh Hasina #Bangladesh Bhawan #NarendraModi #MamataBanarjee
    Next Story
    ×