search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 மாத குழந்தை இறப்பு தொடர்பாக பாக். துணை தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன்
    X

    7 மாத குழந்தை இறப்பு தொடர்பாக பாக். துணை தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன்

    காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் துணை தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. #JammuKashmir #Pakistan #India
    ஸ்ரீநகர் :

    காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதி அமலில் இருக்கும் போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது.



    இந்நிலையில், காஷ்மீர் மாநிலம், பிம்பர் மாவட்டத்தில் கடந்த 21-ம் தேதி அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுகுறித்து பாகிஸ்தான் துணை தூதரான சயித் ஹைதர் ஷாவுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று அனுப்பியுள்ள சம்மனில், குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவது மனித உரிமைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரானது.

    ஆனால், சிறிய ரக ஆயுதங்களை கொண்டு வேண்டும் என்றே குறிவைத்து காஷ்மீரில் உள்ள அப்பாவி பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இது மிகவும் மோசமான மற்றும் கண்டிக்கதக்க செயலாகும். சர்வதேச எல்லையில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் கவலையளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளது.

    எனவே, அத்துமீறிய தாக்குதலில் 7 மாத குழந்தை உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் துணை தூதரான சயித் ஹைதர் ஷா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது. #JammuKashmir #Pakistan #India 
    Next Story
    ×