search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனை
    X

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முக்கிய தலைவர்கள் பெங்களூருவில் ஆலோசனை

    கர்நாடகத்தில் முதல்மந்திரியாக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வந்துள்ள பல மாநிலங்களின் முக்கிய தலைவர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அலோசனை நடத்தினர். #Karnatakaelection #ChandrababuNaidu #Arvind Kejriwal #MamataBanerjee #Mayawati #Akhilesh
    பெங்களூரு :

    கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4:30 மணியளவில் கோலாகலமாக நடைபெற்றது. 

    இந்த பதவி ஏற்பு விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரிகள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.


    பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காதாத பெரும்பாலான மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பெங்களூருவில் ஒன்றுசேர்ந்துள்ளது அடுத்த பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அச்சாரமாக பார்க்கப்படுகிறது.

    பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கம்யூனிஸ்டு தலைவர் சீதாராம் யெச்சூரி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதேபோல் எலியும் பூனையுமாக இருந்த உ.பி முன்னால் முதல்வர்களான அகிலேஷ் மற்றும் மாயாவதி ஆகியோர் தனியாக சந்தித்து பல நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.


    இதேபோல், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இருவரும் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு,  “கர்நாடக முதல்வர் குமாரசாமியுடன் சேர்ந்து எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே நாங்கள் இங்கே வருகை தந்துள்ளோம். அனைத்து மாநில கட்சிகளும் ஒன்றினைந்து எங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளோம். வருங்காலத்தின் எங்களை பாதுகாத்துக்கொள்ளவும் நாங்கள் தேசிய நலன்களை பாதுகாக்கவும் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமையாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

    பதவியேற்பு மேடையில் திரண்டிருந்த தலைவர்களில் சோனியா காந்தி மற்றும் மாயாவதி ஆகிய இருவரும் ஆரத்தழுவிக் கொண்டு சிரித்து பேசினர். பின்னர் பொதுமக்களை நோக்கி இருவரும் சேர்ந்து உற்சாகமாக  கையை அசைத்தனர்.  #Karnatakaelection #ChandrababuNaidu #Arvind Kejriwal #MamataBanerjee #Mayawati #Akhilesh
    Next Story
    ×