search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு
    X

    கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுப்பு

    கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #RahulGandhi #CongressLeaders
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மந்திரி பதவியை யாருக்கெல்லாம் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக குமாரசாமி இன்று (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தியை சந்தித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் டெல்லிக்கு வர வேண்டாம் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார். டெல்லிக்கு வரும் தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு மந்திரி பதவி கேட்டு வற்புறுத்தலாம் என்பதாலும், பெங்களூருவில் உள்ள எம்.எல்.ஏ.க்களை வருகிற 24-ந் தேதி வரை பாதுகாக்க வேண்டி இருப்பதாலும், டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல்காந்தி அனுமதி மறுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர், சாமனூர் சிவசங்கரப்பா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இடையே துணை முதல்-மந்திரி பதவிக்காக கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் 2 பேருக்கு துணை முதல்-மந்திரி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களில் பரமேஸ்வருக்கு மட்டும் துணை முதல்-மந்திரி பதவி உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. 
    Next Story
    ×