search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவிப்பு
    X

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #DharmendraPradhan #FuelPrice
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.13, டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.71.32 என விற்பனையானது.

    நாட்டின் நிதித்தலைநகர் என்று அழைக்கப்படுகிற மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.07, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.94. ஆகும். இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எரிபொருட்கள் விலை உயர்வால் இந்திய குடிமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வருகிற விலை உயர்வுதான் இதற்கு காரணம். இதற்கு மத்திய அரசால் விரைவில் தீர்வு காணப்படும்” என்று குறிப்பிட்டார்.  #DharmendraPradhan #FuelPrice
    Next Story
    ×