search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான்- காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு
    X

    ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான்- காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு

    ரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். #Pakistanfiring #Mehbooba
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரா, ஆர்னியா உள்ளிட்ட எல்லைப்பகுதி காவல் சாவடிகளின்மீது  பாகிஸ்தான் படைகள் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த எல்லை பாதுக்காப்பு படைவீரர் மற்றும் பொதுமக்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியை நிலைநாட்ட இந்தியா எடுத்துவரும் முயற்சிகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளித்து ஒத்துழைக்க வேண்டும்.

    ரம்ஜான் நோன்பு மாதம் என்பதால் இருதரப்பு தாக்குதல்களை நிறுத்திகொள்ள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை இந்தியா முன்னெடுத்துள்ளது. ஆனால், ரம்ஜான் மாதத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பதைதான் இன்றைய தாக்குதல் காட்டுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள கனூர் கிராமத்தின்மீது இந்திய படைகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய தூதரை அழைத்து இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Pakistanfiring #Mehbooba
    Next Story
    ×