search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா ஒருநாள் முதல் மந்திரி மட்டுமே - காங்கிரஸ் ஆவேசம்
    X

    எடியூரப்பா ஒருநாள் முதல் மந்திரி மட்டுமே - காங்கிரஸ் ஆவேசம்

    கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே எடியூரப்பா முதல் மந்திரியாக இருப்பார் என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். #KarnatakaCMRace #Yeddyurappa #Congress
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அக்கட்சியை ஆட்சியமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். அத்துடன் எடியூரப்பாவுக்கு முதல் மந்திரியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார்.

    மேலும், இன்னும் 15 நாட்களுக்குள் அவர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

    கர்நாடக மாநிலத்தில் ஆட்சியமைக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை. இதனால்காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. வலை விரிக்கத் தொடங்கியுள்ளது என காங்கிரஸ்  குற்றம் சாட்டியுள்ளது.



    இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரு நாள் மட்டுமே எடியூரப்பா முதல் மந்திரியாக இருப்பார் என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரசார் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பா.ஜ.க.வை சேர்ந்த எடியூரப்பாஒருநாள்முதல் மந்திரியாக மட்டுமே நீடிப்பார். அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது.
    எடியூரப்ப்பாவை ஆட்சி அமைக்க அழைத்ததன் மூலம் கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா அரசியல் அமைப்பு மீது இருமுறை கடும் தாக்குதலை நடத்தியுள்ளார். 

    பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோருக்கு தைரியம் இருந்தால் நாளை கர்நாடக சட்டசபையில்  தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    மேலும், நாடு முழுவதும் உள்ள மாநில தலைநகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் நாளை தர்ணா போராட்டம் நடத்த வேண்டும் என கட்சியிருக்கு காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். #KarnatakaCMRace #Yeddyurappa #Congress
    Next Story
    ×