search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம் கைவிரிப்பு
    X

    மேற்குவங்க பஞ்சாயத்து தேர்தலில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம் கைவிரிப்பு

    மேற்குவங்க மாநிலத்தில் நடைபெறவுள்ள பஞ்சாயத்து தேர்தல் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #Westbengal #Panchayatpoll #Highcourt
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் மே 1 முதல் 5 தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் தேதியை மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒரே கட்டமாக மே 14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

    இதற்கிடையே தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை மாற்றியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த தனி நீதிபதி தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட முடியாது என தெரிவித்தார். 

    இந்த உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரிட்ஜு கோசல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சோமாதர் மற்றும் நீதிபதி முகர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

    இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, மேற்குவங்க மாநிலம் பஞ்சாயத்து தேர்தல் நடைமுறை தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி ரிட்ஜு கோசல் மனுவை தள்ளுபடி செய்தனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் தேர்தலை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினர். #Westbengal #Panchayatpoll #Highcourt
    Next Story
    ×