search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாத்மா காந்தி ஆண்டு விழா தொடர்பான கூட்டம்: தமிழகம் தவிர தென் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணிப்பு
    X

    மகாத்மா காந்தி ஆண்டு விழா தொடர்பான கூட்டம்: தமிழகம் தவிர தென் மாநில முதல்-மந்திரிகள் புறக்கணிப்பு

    மகாத்மா காந்தி 150-வது ஆண்டு விழா தொடர்பான கூட்டத்தை தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். #GandhiAnniversary
    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவின் முதல் கூட்டம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஆனால் தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா முதல்-மந்திரிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

    இது குறித்து ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தரப்பில் கூறுகையில், எங்களுக்கு நேற்று முன்தினம் மாலை தான் அழைப்பு வந்தது. ஆனால் ஏற்கனவே மந்திரிசபை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததால் இதில் பங்கேற்க முடியவில்லை. எனினும் இந்த விழாவுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தரப்பிலும் இதே காரணம் கூறப்பட்டது.

    கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று அந்த மாநில முதல்-மந்திரி சித்தராமையா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3-வது அணி அமைக்கும் முயற்சியில் அகிலேஷ் யாதவை சந்திக்க ஏற்பாடு செய்திருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்று தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் தரப்பில் கூறப்பட்டது.  #GandhiAnniversary  #Tamilnews 
    Next Story
    ×