search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்பு
    X

    உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா பதவியேற்பு

    மூத்த பெண் வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ராவிற்கு இன்று உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். #supremecourt #indumalhotra
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், இந்து மல்ஹோத்ராவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேற்று நியமனம் செய்தது. கே.எம்.ஜோசப் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டவில்லை. இது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், இன்று இந்து மல்ஹோத்ரா உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தில் இந்துவுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்து மல்ஹோத்ரா 2007-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர். மேலும், இவர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்கும் 7 வது பெண் என்பது குறிப்பிடத்தக்கது. #supremecourt #indumalhotra
    Next Story
    ×