search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றியது மேற்கு வங்காளம் தேர்தல் ஆணையம்
    X

    பஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றியது மேற்கு வங்காளம் தேர்தல் ஆணையம்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றி அமைத்து மாநில தேர்தல் ஆணையம் புதிய தேதிகளை வெளியிட்டுள்ளது. #WestBengalPanchayatPolls
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்து அமைப்புகளுக்கு வரும் மே மாதம் 1,3,5 ஆகிய தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்த நிலையில் ஆளும் திரிணாமுல் கட்சியினர் எதிர்க்கட்சிகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விடுவதில்லை எனவும், வேட்புமனுக்களை அதிகாரிகள் வழங்குவது இல்லை எனவும் புகார் எழுந்தது.

    இது தொடர்பாக பா.ஜ.க ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் வேட்புமனு தாக்கல் செய்ய ஒருநாள் கூடுதல் கால அவகாசம் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. இதனை அடுத்து, கடந்த திங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிந்தது.

    இந்நிலையில், புதிய தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. முன்பு மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 14-ம்  தேதி தேர்தல் 17-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேவைப்பட்டால் 16-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WestBengalPanchayatPolls 
    Next Story
    ×