search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 5 பேர் பலி
    X

    சித்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்து 5 பேர் பலி

    சித்தூர் அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தானாவட்டி பல்லி கிராமத்தில் இன்று கெங்கையம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் தானா வட்டி பல்லி கிராமத்திற்கு வந்திருந்தனர்.

    திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள் கடப்பா-பீலேரு மெயின் ரோட்டில் சாலை அருகே நின்றிருந்தனர்.

    அப்போது கடப்பாவில் இருந்து பீலேருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த பக்தர்கள் மீது மோதியது. இதில் 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    படுகாயம் அடைந்த 4 பேரை மீட்ட கிராம மக்கள் சிகிச்சைக்காக திருப்பதி ரூயா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 4 பேரில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். விபத்து குறித்து பீலேரு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    கோவில் திருவிழாவில் லாரி மோதி 5பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.  #Tamilnews
    Next Story
    ×