search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரண தண்டனை கைதிகளுக்கு தூக்குதான் பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
    X

    மரண தண்டனை கைதிகளுக்கு தூக்குதான் பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

    மரண தண்டனை கைதிகளை விஷ ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. #deathpenalty #SupremCourt
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில் ரிஷி மல்கோத்ரா என்ற வக்கீல், ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த வழக்கில் அவர், மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடாமல், வேறு வகையில் தண்டனையை நிறைவேற்ற வழி காண உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

    மேலும், “அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், ஒருவர் கண்ணியமான முறையில் இறப்பது அடிப்படை உரிமை” என அறிவிக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

    இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றது. இது தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “மரண தண்டனை கைதிகளை விஷ ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது, துரிதமானது” என கூறி உள்ளது.

    மேலும், மரணம் உடனே நேரிடாமல் (அவஸ்தை) நீளுவதற்கான சாத்தியத்தையும் அது நீக்குகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.   #Tamilnews #deathpenalty #SupremCourt
    Next Story
    ×