search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்வே வேலைக்கு 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்
    X

    ரெயில்வே வேலைக்கு 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்

    ரெயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறையில் காலியாக உள்ள சுமார் 90 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. கை நிறைய சம்பளத்துடன் பல சலுகைகள் கிடைக்கும் என்பதால் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

    இதில் மொத்தம் உள்ள 89 ஆயிரத்து 409 பணியிடங்களுக்கு 2 கோடியே 37 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் 26 ஆயிரத்து 502 டெக்னீசியன் பணியிடங்களுக்கு 47 லட்சத்து 56 ஆயிரம் பேரும், 62 ஆயிரத்து 907 குரூப்-டி பணியிடங்களுக்கு 1 கோடியே 90 லட்சம் பேரும் விண்ணப்பித்து உள்ளனர்.

    இவர்களுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு நடத்தி முடிக்க 2 மாதங்கள் ஆகும். ஆன்லைன் தேர்வால் காகித பயன்பாடு குறைக்கப்பட்டு, 10 லட்சம் மரங்களின் பயன்பாடு மிச்சமாகும். ரெயில்வே பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது.

    மேற்கண்ட தகவல்கள் ரெயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    Next Story
    ×