search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு அரசுக்கு ஆர்வமில்லை - கபில்சிபல்
    X

    தலைமை நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்துவதற்கு அரசுக்கு ஆர்வமில்லை - கபில்சிபல்

    தலைமை நீதிபதிக்கு எதிரான விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கு அரசுக்கு ஆர்வமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார். #CJIDipakMisra #DipakMisra #KapilSibal
    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டன தீர்மான நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் வெங்கையா நாயுடுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கபில்சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் தொடர்பாக வெங்கையா நாயுடு பிறப்பித்த உத்தரவு நாட்டின் சட்ட அமைப்பை சீர்குலைத்துள்ளது. இந்த உத்தரவு முன்னெப்போதும் இல்லாதது, சட்ட விரோதமானது, தவறான பரிந்துரைப்பால் விளைந்தது மற்றும் அவரசமானது.

    இந்திய வரலாற்றில் எம்.பி.க்களின் தீர்மானம் ஒன்று தொடக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட்டு இருப்பது இதுவரை இல்லாதது. முழுமையான விசாரணை நடத்தாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு மக்களின் நம்பிக்கையை சிதைத்து உள்ளது.

    இந்த விவகாரத்தில் ஒரு விசாரணை நடத்துவதற்கு அரசுக்கு ஆர்வமில்லை. இந்த உத்தரவை எதிர்த்து நாங்கள் நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவோம்.

    இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

    முன்னதாக வெங்கையா நாயுடுவின் உத்தரவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, இது நிராகரிப்பு ஜனநாயகத்துக்கும், குரல் மீட்பு ஜனநாயகத்துக்கும் இடையிலான போராட்டம் என ‘டுவிட்டர்’ தளத்தில் வர்ணித்து இருந்தார்.

    எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அளித்த பதவிநீக்க நோட்டீசின் தகுதி குறித்து தீர்மானிக்க மாநிலங்களவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பாக கிருஷ்ண சுவாமியின் வழக்கை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் வெங்கையா நாயுடு கூறுவது போல, தீபக் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு முன்பே நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். #CJIDipakMisra #DipakMisra #KapilSibal
    Next Story
    ×