search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா தேர்தல் - நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க
    X

    கர்நாடகா தேர்தல் - நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

    கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ள 7 பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElections
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பா.ஜ.க ஆட்சியை பிடிக்கவும் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி எல்லா தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்துள்ளது.

    முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி மற்றும் பதாமி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட உள்ளார். பா.ஜ.க மூன்று கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. பல ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், 7 பெயர்கள் கொண்ட நான்காவது கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #KarnatakaAssemblyElections #BJP #TamilNews
    Next Story
    ×