search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமய்யாவை எதிர்த்து படாமியில் களம் இறங்க தயார்- எடியூரப்பா
    X

    சித்தராமய்யாவை எதிர்த்து படாமியில் களம் இறங்க தயார்- எடியூரப்பா

    படாமி தொகுதியில் முதல் மந்திரி சித்தராமய்யாவை எதிர்த்து போட்டியிட தயார் என கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, வேட்பு மனு தாக்கலும், பிரசாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள முதல் மந்திரி சித்தராமய்யா 23-ம்தேதி படாமி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இரண்டு தொகுதியில் பேட்டியிடுவதை நேற்றுவரை உறுதிப்படுத்தாத சித்தராமைய்யா படாமி தொகுதியில் வரும் 23-ம்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் மேலிடம் விரும்பினால் படாமி தொகுதியில் சித்தராமய்யாவை எதிர்த்து களம் இறங்க தயார் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில் ‘‘படாமி தொதியில் நான் போட்டியிட வேண்டுமா? அல்லது வேறு நபர் போட்டியிட வேண்டுமா? என்பதை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் முடிவு செய்வார். நான் போட்டியிட தயார். வேறு நபர் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டால், அவர்கள் போட்டியிடுவார்கள்.

    ஆனால், படாமி தொகுதியில் ஈடுகொடுக்கும் வகையில் பலமான வேட்பாளரை நிறுத்தி, சித்தராமய்யாவை தோற்கடிப்போம். இதற்கான வேலைகளை பா.ஜனதா ஏற்கனவே தொடங்கிவிட்டது. நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை கட்சிதான் முடிவு செய்யும். பா.ஜனதா கட்சியில் நாங்கள் ராணுவ வீரர்கள் போன்றவர்கள். கட்சி என்னை எங்கு போட்டியிட கேட்டுக்கொண்டாலும், நான் அங்கு போட்டியிடுவேன்’’ என்றார்.
    Next Story
    ×