search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கேரளாவில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து வேலைநிறுத்தம்

    கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் சுமார் 68 ஆயிரம் செவிலியர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்ததில் குதிக்கின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, அவர்களின் குறைகளை கேட்ட மாநில அரசு, ஐம்பதுக்கும் குறைவான படுக்கை வசதி கொண்ட தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு இனி குறைந்தபட்ச சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தது.

    இதுதொடர்பாக, கடந்த நவம்பர் மாதம் மாநில அரசின் சார்பில் அறிவிக்கையும் வெளியிடப்பட்டது. ஆனால், குறைந்தபட்ச சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற அதிகாரப்பூர்வ உத்தரவு மட்டும் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி செவிலியர்கள் சங்க பிரதிநிதிகள் பலமுறை அரசை தொடர்புகொண்டபோது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகளும், செவிலியர் சங்க பிரதிநிதிகளும் நடத்திவந்த பேச்சுவார்த்தையும் சமீபத்தில் தோல்வியில் முடிந்தது.

    எனவே, அரசின் இந்த மெத்தனப்போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள ஐம்பதுக்கும் குறைவான படுக்கை வசதி கொண்ட சுமார் 450 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 68 ஆயிரம் செவிலியர்கள் வரும் 24-ம் தேதியில் இருந்து மீண்டும் காலவரையற்ற வேலைநிறுத்ததில் குதிக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளனர்.

    இந்த போராட்டம் தொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த ஐக்கிய செவிலியர்கள் சங்க தலைவர் ஜாஸ்மின் ஷா, இந்த முறை எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் எங்களது கோரிக்கை நிறைவேறும்வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும். #tamilnews
    Next Story
    ×