search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷங்காய் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் சுஷ்மா சுவராஜ்
    X

    ஷங்காய் கூட்டுறவு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் சுஷ்மா சுவராஜ்

    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று சீனா, மங்கோலியா நாடுகளுக்கு புறப்பட்டு சென்றார்.
    புதுடெல்லி:

    சிக்கிம் மாநிலத்தில் இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியையொட்டி கடந்த ஆண்டில் சீனா சாலைப் பணிகளை மேற்கொண்டது. இதனையடுத்து, இந்திய ராணுவம் அங்கு படைகளை அதிரடியாக குவித்தது. இதற்கு பதிலடியாக டோக்லாம் பகுதி தங்களுக்கு சொந்தமானது என கூறிய சீனா தங்களது ராணுவத்தினரையும் எல்லையில் குவித்தது.

    இருநாடுகளின் இந்த ராணுவ நடவடிக்கைகள் எல்லையில் போர்ப்பதற்றத்தை உண்டாக்கியது. அது மட்டுமல்லாமல் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களின் கருத்து மோதல்கள் பதற்றத்தை மேலும் வலுவாக்கின.

    பின்னர், கடந்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து கைகுலுக்கி பேசினர்.

    இதனால் போர்பதற்றம் சற்று தணிந்தது. இதற்கிடையில், இந்தியாவுடனான எல்லைப்பிரச்சனை தொடர்பாக விவாதிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் சீனா சென்றார். ஷங்காய் நகரில் கடந்த 13-ம் தேதி சீன அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகளை அவர் சந்தித்து எல்லைப் பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், சீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் 24-ம் தேதி ஷங்காய் நகரில் நடைபெறுகிறது. ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று ஷங்காய் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

    இந்த பயணத்தின்போது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி-யை சந்திக்கும் சுஷ்மா, தோக்லாம் எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் மங்கோலியா நாட்டுக்கு செல்லும் அவர் அங்கு இருநாட்கள் தங்கி இருந்து இந்தியா-மங்கோலியா இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். #tamilnews
    Next Story
    ×