search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி சித்தராமையா வேட்புமனு தாக்கல்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் - முதல் மந்திரி சித்தராமையா வேட்புமனு தாக்கல்

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல் மந்திரி சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #Karnataka #Assemblyelection #Siddharamaiah
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 12-ந்தேதி நடக்கிறது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

    மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 218 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதே போல் பா.ஜனதாவும் 224 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை 3 கட்டமாக வெளியிட்டது.



    இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல் மந்திரி சித்தராமையா தனது ஆதரவாளர்களுடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்ற சித்தராமையா, அங்கு அம்மனை வணங்கி வழிபட்டார். 

    ஏற்கனவே, பா.ஜ.க.வின் முதல் மந்திரி வேட்பாளரான எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karnataka #Assemblyelection #Siddharamaiah #Tamilnews
    Next Story
    ×