search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்
    X

    ஸ்வாதி மாலிவால் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை - மத்திய அரசு மீது ஆம் ஆத்மி பாய்ச்சல்

    டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசுக்கு ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது உள்ளிட்ட கொடூரமான சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபோன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு  எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி ராஜ்காட்டில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவரதுபோராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.  ஆனால் அவரது போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு  ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.



    ‘பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்திற்காக டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நடத்தி வரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது. ஆனால் ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கல்வி கற்பிப்போம்’ என்று பெருமையாக பேசி வரும் பா.ஜ.க. அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை’ என ஆம் ஆத்மி டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளது.

    ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சங், நேற்று ஸ்வாதி மாலிவாலுடன் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பா.ஜ.க.வை அவர் கடுமையாகச் சாடினார். இதேபோல் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா, பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்கா உள்ளிட்ட பலரும் மாலிவாலுடன் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×