search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை
    X

    700 ஆண்டுகள் பழமையான ஆலமரத்திற்கு மருத்துவ சிகிச்சை

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பட்டுப்போகும் தருவாயில் இருப்பதால் அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. #banyantree
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் மெகபூபாநகர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 700 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் 3 ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. அதன் ஒரு கிளை மரத்தில் பூச்சுத்தொற்று காணப்பட்டது. இது மற்ற பகுதிக்கு பரவினால் மரம் பட்டுப்போய்விடும் அபாயத்தில் இருந்தது.

    இந்நிலையில், அம்மரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் மரத்திற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஆலமரத்திற்கு மனிதர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுவது போல பாட்டில்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் நிரப்பப்பட்டு மரத்திற்கு செலுத்தப்பட்டன. மேலும், சத்து நிறைந்த உரங்கள் போடப்பட்டு வருகின்றன.

    ஆலமரத்திற்கு மனிதர்களை போன்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்படு வருவது அனைவரிடமும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #banyantree
    Next Story
    ×