search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் ஆர்ஜித சேவை, அறைகள் செல்போன் மூலம் முன்பதிவு
    X

    திருப்பதியில் ஆர்ஜித சேவை, அறைகள் செல்போன் மூலம் முன்பதிவு

    திருப்பதியில் ஆர்ஜித சேவை, டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு முறை பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கென ஒரு தனி இணையதளம் உள்ளது. அதன் மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதனை எளிமைப்படுத்தும் வகையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் புதிதாக ஏற்கனவே செல்போன் செயலியை வெளியிட்டுள்ளது.

    அந்தச் செல்போன் செயலியின் உதவியோடு பக்தர்கள் தங்களின் ஸ்மார்ட் போன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுக்கு முன்பதிவு செய்தல், தங்கும் விடுதிகளில் அறைகளுக்கு முன்பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்களின் விவரங்களை தெரிந்து கொள்கிறார்கள்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட செல்போன் செயலி, பக்தர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருமலையில் கோவில் பயன்பாட்டுக்கும், தங்கும் விடுதிகளில் பக்தர்களின் பயன்பாட்டுக்கும், உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜி நகர் பகுதிக்கும் தண்ணீர் வினியோகம் செய்ய கோகர்ப்பம், பசுபுதாரா, குமாரதாரா, ஆகாச கங்கை, பாபவிநாசனம் ஆகிய அணைகள் உள்ளன.

    மேற்கண்ட 3 அணைகளில் உள்ள தண்ணீரும், திருமலையில் மழை பெய்யாமல் இருந்தாலும் இன்னும் 610 நாட்களுக்கு வரும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடைக்காலத்தால் திருமலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. உள்ளூர் மக்களும், பக்தர்களும் பயப்பட தேவையில்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews

    Next Story
    ×