search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் அனைத்து பாஜக மந்திரிகளும் உடனடியாக ராஜினாமா செய்ய உத்தரவு
    X

    காஷ்மீரில் அனைத்து பாஜக மந்திரிகளும் உடனடியாக ராஜினாமா செய்ய உத்தரவு

    ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு அக்கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. #Kathuarapecase #BJPMinistersResign
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர்.

    சிறுமியை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவான பேரணியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மந்திரிகள் பங்கேற்ற சம்பவம் பா.ஜ.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகளான சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. மந்திரிகளையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இளம் எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து வருகிற 20-ம் தேதி அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. #Kathuarapecase #BJPMinistersResign 
    Next Story
    ×