search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?
    X

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 40 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா?

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ஜெகன்மோகன் ரெட்டி ஆலோசித்து வருகிறார். #APSpecialStatus #YSRCongress
    ஐதராபாத்:

    ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதால் வருவாய் இழப்பை ஈடு செய்ய, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    சிறப்பு அந்தஸ்து வழங்க, முதலில் சம்மதித்த மத்திய அரசு, பிறகு அதற்கு மறுத்து விட்டது.

    சுமார் 30 தடவை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று பேசியும் சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினார்.

    அடுத்த ஆண்டு (2019) ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசை எதிர்த்து அவர் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு கடும் போட்டியாளராகத் திகழும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் சிறப்பு அந்தஸ்து கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் சமீபத்தில் தனது 9 எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது அவர் சிறப்பு அந்தஸ்தை வலியுறுத்தி பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மக்கள் ஆதரவைப் பெற மேலும் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க ஆலோசித்து வருகிறார்.

    பொதுத் தேர்தல் நடத்த ஓராண்டுக்கு குறைவான கால அவகாசம் இருந்தால் தேர்தல் கமி‌ஷன் இடைத்தேர்தலை நடத்தாது. இந்த விதியை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 40 பேரையும் ராஜினாமா செய்ய வைக்க உள்ளார். இதன் மூலம் ஆந்திர மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்.

    மேலும் சிறப்பு அந்தஸ்து கோரி மேற்கொண்டுள்ள பாத யாத்திரையை மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கவும் திட்டமிட்டுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடிகள் சந்திரபாபு நாயுடுக்கு சவாலாக மாறியுள்ளது. #APSpecialStatus #YSRCongress
    Next Story
    ×