search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரான் பஸ் விபத்தில் இந்திய சிறுமி பலி - 19 பேர் காயம்
    X

    ஈரான் பஸ் விபத்தில் இந்திய சிறுமி பலி - 19 பேர் காயம்

    ஈரான் நாட்டில் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்ததாக மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். #Indiangirlkilled #Indiansinjured
    புதுடெல்லி:

    சவுதி அரேபியா, ஈராக், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமியர்களின் யாத்திரைத்தலமாக போற்றப்படும் பல்வேறு நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. அவற்றை தரிசிப்பதற்காக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து யாத்ரீகர்கள் சென்று வருகின்றனர்.

    அவ்வகையில், ஈரான் நாட்டில் புனித யாத்திரை மேற்கொண்ட இந்தியர்கள் சென்ற பஸ் நேற்றிரவு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 வயது சிறுமி உயிரிழந்ததாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

    ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே சுமார் 125 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோம் நகரில் இஸ்லாமியர்களில் ஷியா பிரிவினரால் எட்டாவது இமாமாக போற்றி கொண்டாடப்படும் இமாம் அலி இப்ன் முஸா ரிடா என்பவரது சகோதரியின் நினைவிடம் அமைந்துள்ளது.

    இந்த நினைவிடத்தை தரிசிக்க இந்தியாவில் இருந்து சென்ற 20 பேரை கொண்ட குழுவினர் சென்ற ஒரு பஸ் நேற்றிரவு விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் குல்சும் பாத்திமா என்னும் 14 வயது சிறுமியை நாம் இழந்து விட்டோம் என்பது ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக தெரியவந்துள்ளது.

    இதில் காயமடைந்த 19 பேரில் 18 பேர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒருவர் மட்டும் தீவிர சிகிச்சை பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். #tamilnews  #Indiangirlkilled #Indiansinjured
    Next Story
    ×