search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற அரியானா வீரர்-வீராங்கனைகளுக்கு 26-ம் தேதி பாராட்டு விழா
    X

    காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற அரியானா வீரர்-வீராங்கனைகளுக்கு 26-ம் தேதி பாராட்டு விழா

    காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற அரியானா மாநிலத்தை சேர்ந்த 22 வீரர்-வீராங்கனைகளுக்கு 26-ம் தேதி அரசின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. #CWGmedalists #manoharlalkhattar
    சண்டிகர்:

    ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்-வீராங்கனைகள் நாட்டுக்கு 66 பதக்கங்களை வென்று தந்துள்ளனர். இவர்களில் 22 பேர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களை கவுரவிக்கும் வகையில் அரியானா அரசின் சார்பில் வரும் 26-ம் தேதி பாராட்டு விழா நடத்தப் போவதாக அம்மாநில முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் இன்று தெரிவித்துள்ளார்.

    தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 75 லட்சம் ரூபாயும், வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    நாட்டின் மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் அளவிலான மக்களை கொண்டுள்ள அரியானா மாநிலத்தில் விளையாட்டில் சிறப்பிடத்தை பிடிப்பவர்களை ஊக்குவிப்பதிலும், கவுரவிப்பதிலும் தனது தலைமையிலான அரசு எப்போதுமே முன்னுரிமை அளித்துவருவதாக மனோகர் லால் கத்தார் குறிப்பிட்டார்.

    நாட்டிலேயே பெரிய தொகையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதற்கு 6 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றதற்கு இரண்டரை கோடி ரூபாயும் மாநில அரசின் சார்பில் அளிக்கப்பட்டதையும், விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மாநில அரசின் உயர் பதவிகளில் அரசு பணி அளிக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவுகூர்ந்தார். #tamilnews #CWGmedalists #manoharlalkhattar 
    Next Story
    ×