search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் மேல்சபை தேர்தல்- நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல்
    X

    பீகார் மேல்சபை தேர்தல்- நிதிஷ் குமார் வேட்பு மனு தாக்கல்

    பீகார் மாநில சட்டமன்ற மேல்சபைக்கு 26-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி ஆகியோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் முன்னர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவுடன் தேவேகவுடா தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. நிதிஷ் குமார் முதல் மந்திரியாக பதவி வகித்திருந்தார்.

    இடையில் லாலுவுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதனால், கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக லாலுவுடனான கூட்டணியை முறித்துகொண்ட நிதிஷ் குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல் மந்திரியாக தொடர்ந்து வருகிறார்.


    இந்நிலையில், பீகார் மாநில சட்டமன்ற மேல்சபை உறுப்பினர்களாக உள்ள நிதிஷ் குமார், முன்னாள் முதல் மந்திரி ரப்ரி தேவி உள்பட 11 பேரின் பதவிக்காலம் மே 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், மேல்சபைக்கு வரும் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல் மந்திரி நிதிஷ் குமார், துணை முதல் மந்திரி சுஷில் குமார் மோடி, சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே மற்றும் மேலும் 4 பேர் சட்டசபை செயலாளர் ராம் சிரேஷ்த் ராய்-இடம் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
    Next Story
    ×