search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி  சுற்றுப்பயணம்
    X

    அமேதி தொகுதியில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 16,17 தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். #rahulgandhi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் நலத்திட்டங்களை பார்வையிடவும், மக்களின் குறைகளை கேட்டறிவதற்காகவும் வரும் 16,17 தேதிகளில் அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இந்த பயணத்தின்போது அமேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டதில் அவர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews  #rahulgandhi
    Next Story
    ×