search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்று கோஷம் மட்டும் போதுமா? - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
    X

    வெற்று கோஷம் மட்டும் போதுமா? - பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி

    சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் நடத்திய பேரணியில் பேசிய ராகுல் காந்தி, வெற்று கோஷம் மட்டும் போதுமா? என பிரதமருக்கு கேள்வி எழுப்பினார். #RahulGandhi #Delhi
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதேபோல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.

    இந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், வன்முறை சம்பவங்கள், கொலை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது அரசியல் ரீதியானது அல்ல. தேசிய அளவில் சம்பந்தப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டிக்கும் வகையில், அனைத்து கட்சியில் இருந்தும் வந்து இங்கு பங்கேற்றுள்ளனர். நாடு முழுவதும் கொலை, கற்பழிப்பு என வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் செயல்படாத மத்திய அரசை செயல்பட வைப்பதற்காக நாம் இங்கு வந்துள்ளோம்.   

    பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதை செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×