search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுப்பு
    X

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுப்பு

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய நீதிபதி செல்லமேஸ்வர் மறுத்துவிட்டார்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மத்திய முன்னாள் சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான சாந்தி பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், வழக்குகளை விசாரிக்க அமர்வு அமைக்கும்போது, தலைமை நீதிபதி தன்னிச்சையாக செயல்படுவதாகவும், எனவே, அமர்வுகளுக்கு வழக்கை அனுப்புவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரியும் அவர் கூறி இருந்தார்.

    இந்த மனுவை அவசரமாக எடுத்துக் கொள்ளுமாறு நேற்று நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் முன்பு சாந்தி பூஷணின் மகனும், மூத்த வக்கீலுமான பிரசாந்த் பூஷண் வற்புறுத்தினார்.

    ஆனால், நீதிபதி செல்லமேஸ்வர் அதற்கு மறுத்து விட்டார். மேலும், கோர்ட்டு நிகழ்வுகள் குறித்து அவர் மீண்டும் வேதனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    இதில் நான் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. எனது உத்தரவை 24 மணி நேரத்தில் மாற்றி அமைக்கும் சூழ்நிலையை மீண்டும் சந்திக்க விரும்பவில்லை. அதனால்தான், இதை விசாரிக்க நான் விரும்பவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். எனது சிரமத்தை புரிந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் கூறினார்.

    இதையடுத்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வுக்கு வக்கீல் பிரசாந்த் பூஷண் சென்று மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு உறுதி அளித்தது. 
    Next Story
    ×