search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை வழக்கில் கால அவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்
    X

    இரட்டை இலை வழக்கில் கால அவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு டெல்லி ஐகோர்ட்டு கண்டனம்

    இரட்டை இலை வழக்கில் காலஅவகாசம் கேட்ட தினகரன் தரப்புக்கு கண்டனம் தெரிவித்து வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்தது. பின்னர் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு என்பது குறித்து வழக்கு தொடரப்பட்டது.

    இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் ஒதுக்கியது.

    தேர்தல் கமி‌ஷனின் இந்த உத்தரவை தொடர்ந்து தினகரன் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    நீதிபதிகள் சஸ்டைன், சங்கீதா சேசுல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. டி.டி.வி.தினகரன் தரப்பு கால அவகாசம் கேட்டதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    வழக்கு இன்று நடக்கிறது என்று தெரிந்தும் முன்னரே தயாராக வந்து இருக்கலாமே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பின்னர் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #tamilnews #delhihighcourt #ttvdhinakaran #ttvdinakaran
    Next Story
    ×