search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகழ்பெற்ற தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்தது
    X

    புகழ்பெற்ற தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்தது

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெய்த கடும் மழையினால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் நுழைவு வளாக தூண் இடிந்து விழுந்தது. #tajmahal
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் மாநிலத்தில் இது வரை 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், 35க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இரவு பெய்த மழையின் தாக்கத்தினால் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலில் நுழைவு வளாக தூண்கள் இன்று காலை இடிந்து விழுந்தது. அதில் உள்ள கலசங்கள் சேதமடைந்தன. மேலும், வளாகத்தில் இருந்த மரஙக்ள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளதாக தாஜ்மஹால் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூண் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க தூண்கள் கீழே இடிந்து விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tajmahal
    Next Story
    ×