search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை நீதிபதி உள்பட அனைவரும் சமம் - பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    தலைமை நீதிபதி உள்பட அனைவரும் சமம் - பொதுநல மனுவை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகளுக்கு வழக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல மனு குறித்து தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் சமமானவர்கள் என கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினார்கள். முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் வழக்கு ஒதுக்கீடு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் “அரசியல் சாசன அமர்வுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படை தன்மை தேவை என்றும், இதற்கான வழிகாட்டுதலை வடிவமைக்க வேண்டும்” என்றும் கூறப்பட்டு இருந்தது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.சன்விஸ்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் சமமானவர்களே. வழக்குகளை அமர்வுகளுக்கு ஒதுக்குவது குறித்து அரசியலமைப்பு அதிகாரம்தான் முடிவு செய்கிறது.

    இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவித்தனர். #ChiefJustice #SupremeCourt #chiefjusticeofindia
    Next Story
    ×