search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி ஒதுக்கீடு விவகாரம் - தென் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் தமிழக அரசு
    X

    நிதி ஒதுக்கீடு விவகாரம் - தென் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் தமிழக அரசு

    மாநில அரசுகளுக்கு நிதி பங்கிடும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தென் மாநில நிதி மந்திரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கும் என கூறப்படுகிறது.
    திருவனந்தபுரம்:

    கடந்த 2017-ம் ஆண்டு என்.கே. சிங் தலைமையில் 15 வது நிதி கமிஷன் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கு இடையே நிதி பங்கிட்டு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பதிலாக 2011-ல் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே நிதி ஒதுக்கீடு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கர்நாடக முதல்வர் சித்தராமையா நிதி பாரபட்சத்திற்கு எதிர்த்து தெரிவித்து தனது வலைதளத்தில் தென் மாநிலங்களைப் பாதிக்கும் நிதி பரிந்துரையை நாம் நிச்சயம் எதிர்க்க வேண்டும் எனக் கூறி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, மகாராஷ்டிரா போன்ற மாநில முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுன்டுக்கு டேக் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டேக் செய்திருந்தார்.

    அதேபோல, நிதி பங்கீடு தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், தென் மாநிலங்களிலிருந்து பெறப்படும் வரி, தென் மாநிலங்களை விட அதிகமாக வட மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

    இந்த விவகாரத்தை அடுத்து கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், தென் மாநிலங்களை ஒப்பிடும்போது வட மாநிலங்களிலிருந்து பெறப்படும் வருவாய் குறைவுதான். வட மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கப்படுகிறது. தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவு என கூறி, இது தொடர்பாக விவாதிக்க தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தென் மாநிலங்களின் வருவாய் மூலம் பெறப்படும் வரியை வடமாநிலங்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க ஆலோசனைக் கூட்டம் கேரள அரசு சார்பாக நாளை ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகம் பங்கேற்காது என்றே கூறப்படுகிறது. #TamilNadu
    Next Story
    ×